Tuesday, January 27, 2015

அஜித்தை கண்டு நெகிழ்ந்தேன் - சிவா உருக்கம்..!

பிரம்மான்ட வெற்றிபெற்ற அஜித்தின்
வீரம்
இயக்குனர்
அஜித்தை பற்றி உருக்கமாக
கூறியுள்ளார்.

அவர் கூறியது...
அஜித் ஒரு எளிமையானவர்
என்று நான்
கேள்விபட்டிருக்கேன் .இருந்தாலும்
ஒரு பெரிய
ஹீரோக்கு பப்ளிசிட்டி தேவைபட
இப்படியெல்லாம்
சொல்வாங்கனு நான்
எண்ணுயதுன்டு. . ஆனால்
அது பொய் அஜித்
ஒரு சகமனிதனாக எளிமையானவர்
என்று நான்
கண்டது அன்றுதான் . .

ஆம், ஒருநாள் நைட்
11மணி இருக்கும் ஷீட்டிங்
முடிந்து எல்லோரும்
சாப்பிட்டோம் ,சாப்பிட்டபிறகு
கொஞ்சநேரம்
பேசி எல்லோரும் கிளம்பிட்டோம் .
நான்
வெளியில் வந்து காரில்
ஏறியபோதுதான்
செருப்பை மறந்துவிட்டு வந்துட்டேன்
என்று தெரிந்து எல்லோரும் பேசிய
இடத்துக்கு செருப்பை மாட்ட
சென்றேன் .
அப்போது அங்கு ஒருவர் மட்டும்
நாங்கள்
சாப்பிட்ட
இலைகளை எடுத்து போட்டுவிட்டு இடத்தை சுத்தபடுத்திகொண்டிருந்தார் அருகில் போய் பார்த்தால் அஜித்
அண்ணா ,
எனக்கு என்ன
சொல்வதென்றே தெரியவில்
அண்ணா என்ன பன்றீங்க இதபோய்
நீங்க
பண்ணலாமா ,
வேலைகாரபையனை கூப்பிட்டுருக்க
லாமே என்று அவரை அங்கிருந்து அழைத்தேன் .

அதற்கு அவர் சிவா என்ன தப்பு ?
நாம் சாப்பிட்ட இடத்தை நாம
தானே சுத்தம்
செய்யனும் , அதுமட்டுமில்லாம
மணி இப்போ 12
ஆகுது இப்போ போய் அந்த
பையனை தொந்தரவு செய்வது தப்புப்பா என்று சொல்லி மீண்டும்
சுத்தம் செய்தார் , உடனே நான்
மண்ணிச்சுடுங்கன்னா என்று நானும் அவரும்
சேர்ந்தே இடத்தை முழுவதுமா சுத்தபடுத்தி வீட்டிற்கு சென்றோம் , ,

ஒரு பெரிய மாஸ்
ஹீரோ இவ்வளவு எளிமாயாக
இருப்பதை நினைச்சா இப்பகூட
எனக்கு புல்லரிக்குதுங்க. .

அதானாலதான்பா அவர் தல!

அஜித் படம் தள்ளிப்போனது! - உண்மையை உடைத்த சரண்!!

Saran | Ajith

     கோலிவுட்டிற்கு என்று சில வெற்றி கூட்டணிகள் இருக்கும். அந்த வகையில் அசல் படத்தை தவிர்த்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என தொடர் வெற்றியை அஜித்திற்கு கொடுத்தவர் இயக்குனர் சரண்.

இவர் தற்போது இயக்கியுள்ள ஆயிரத்தில் இருவர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு செய்தியை கூறினார். இதில் ’அஜித்திற்கும், சரணுக்கும் சில மனக்கசப்பு உள்ளதாக வெளியில் கூறப்படுவதாக சொல்கிறார்கள்.

நாங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும், மேலும், அசல் படத்திற்கு பிறகு நானும், அஜித்தும் கவிதாலயா நிறுவனத்திற்காக ஒரு படம் செய்வதாக இருந்தது. அது ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது, ஆனால், கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்’ என இயக்குனர் சரண் கூறியுள்ளார்.