Wednesday, July 22, 2015

Secrets of BAHUBALI success! | பாகுபலி வெற்றியின் சாதனை!!

பாகுபலி படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது...

250 கோடி செலவு செய்த முதல் படம். மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது.

Hero பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்.

23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம்.

தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா அவர்கள். அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 cr செலவு செய்த முதல் படம்.

40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேளை செய்த முதல் இந்திய படம்.

2000 தொழிலாளர் வேளை செய்த முதல் இந்திய படம்.

2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்.

20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

125அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்.

திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 காேடி வசூல் செய்த முதல் இந்திய படம்.

26 (அவார்டு | award) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்.

ஒவ்வொரு காட்சி யையும் 3 மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.

கொச்சியில் 52,400 அடி அகலத்தில் தரையில் போஸ்டர் வைத்த முதல் இந்திய படம்.

1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.

கம்பியூட்டர் கிராப்பிக்ஸ் க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்.

உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்த பட்ட முதல் இந்திய படம்.

மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி, உணவுக்கு 24 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்.

சுமார் 1லட்சம் டன் மரக்கட்டை, பழகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

109 நாட்கள் சண்டை காட்ச்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.

அதிக ஆடை , ஆவரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

போரின் போது வில்லன் பேசும் உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

அரசர்களின் வாழ்ககையையும் உண்மையையும் திரையில் கொண்டு வந்த முதல் இந்திய படம்.

162 இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம்.

முதன்முறையாக BBC சேனலில் பேசப்பட்ட ஒரே இந்திய படம்.

ஒரே நாளில் இதன் ட்ரெய்லரை 5 மில்லியன் மக்கள் பார்த்த முதல் இந்திய படம்.

இத்தகைய பிரம்மாண்ட படைப்புக்கு சொந்தமான இயக்குனர் உயர்திரு ராஜமௌலி

Tuesday, July 21, 2015

வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க ரூ.640 கோடியில் புதிய திட்டம்!


 லண்டன்: பிரபஞ்சத்தில் வேறு கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய ரூ. 640 கோடியில் புதிய திட்டம் ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்கு ரஷ்ய தொழில் அதிபர் யூரி மில்னர் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன. சூரியன் என்ற சிறிய நட்சத்திரத்தை சுற்றி வரும் பூமியில் உயிர்கள் வாழ்கின்றன. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த வான்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேறுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை  ஆராய  புதிய ப்ராஜக்ட் ஒன்றை நேற்று லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளில்  ரூ.640 கோடி செலவழிக்கப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபார் யூனி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். இந்த திட்டம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகையில், எல்லை இல்லாத இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளது. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையிலிருந்து அறிவுபூர்வமான உயிர்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம். பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கிறதா என்ற கேள்வியைக் காட்டிலும் வேறு மிகப்பெரிய கேள்வி இருக்க முடியாது. இதற்கான விடையை தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.


[thanks to dinakaran web]

Sunday, July 19, 2015

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் உறுதியானது தல-57! | Thala57 Updates!!

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார், இப்படம் முடிந்த கையோடு அடுத்து என்ன படம் நடிப்பார் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது.
Thala,..


இந்நிலையில் அடுத்து இவர் அயன், கோ, அனேகன் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளாராம்.
கே.வி.ஆனந்த் கூறிய கதை அஜித்திற்கு மிகவும் பிடித்துப்போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இப்படத்தை பற்றி பல தகவல்கள் வரும் என கூறப்படுகின்றது.

Friday, July 17, 2015

அஜித் வயதை ஏளனம் செய்யும் முட்டாள்களே இதை படியுங்கள்!

தமிழ் திரையுலகில் அஜித்தை பற்றி முன்னனி கதாநாயகிகள் கூறியது..

1. # நயன்தாரா - தமிழ் சினிமாவிலே அஜித்தான் ஹேண்ட்சம்.

2. # த்ரிஷா - நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தவர்.

3. # நஸ்ரியா - அவர்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தால் போதும்.

4. # லட்சுமிமேனன் - அவர் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம்.
5. # பிந்து_மாதவி - கண்ணத்துள ஒரே ஒரு முத்தம் கொடுக்கனும்.
6. # டாப்ஸி - ரஜினியை விட அஜித்தான் பிடிக்கும்.
7. # ஓவியா - அவருக்கு முத்தம் கொடுக்க என் ஆசை.
8. # லட்சுமிராய் - என் சிறந்த நண்பர்.
9. # குஷ்பு - ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் நடிகர் அஜித்.
10. # தமன்னா - அவர்கூட நடிச்சது பெருமையா இருக்கு . . and Etc. . .


இது போல் எந்த ஒரு கதாநாயகியாவது உங்கள் தலைவனை பற்றி பேசியதுண்டா??

தமிழின் ஒரே ஆணழகன் அஜித்டா.. தைரியம் இருந்தால்  வரைபோல் முடிக்கு டை அடிக்காமல் மேக்கப்போடாமால் நடிக்கசொல் உன் தலைவனை நீ புகைபடத்தில் கூட பார்க்கமாட்டாய் . .

What's your favorite Ajith movie ?
1. 2015 - என்னை அறிந்தால்(55)
2. 2014 - வீரம் (54)
3. 2013 - ஆரம்பம் (53)
4. 2013 - இங்கிலிஷ் விங்கிலிஷ்(52)
5. 2012 - பில்லா 2 (51)
6. 2011 - மங்காத்தா (50)
7. 2010 - அசல் (49)
8. 2008 - ஏகன் (48)
9. 2007 - பில்லா (47)
10. 2007 கிரீடம்  (46)
11. 2007 ஆழ்வார் (45)
12. 2006 வரலாறு (44)
13. 2006 திருப்பதி (43)
14. 2006 பரமசிவன் (42)
15. 2005 ஜீ (41)
16. 2004 ஜனா (40)
17. 2004 அட்டகாசம் (39)
18. 2003 என்னை தாலாட்டவருவாளா (38)
19. 2003 ஆஞ்சநேயா (37)
20. 2002 வில்லன் (36)
21. 2002 ரெட் (35)
22. 2002 ராஜா (34)
23. 2001 பூவெல்லாம் உன் வாசம் (33)
24. 2001 தீனா (32)
25. 2001 அசோகா (31)
26. 2001 சிட்டிசன் (30)
27. 2000 முகவரி (29)
28. 2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (27)
30. 2000உன்னை கொடு என்னை தருவேன்(26)
31. 1999 நீ வருவாய் என (25)
32. 1999 தொடரும் (24)
33. 1999 உன்னை தேடி (23)
34. 1999 ஆனந்த பூங்காற்றே (22)
35. 1999 அமர்க்களம் (மனைவி ஷாலினியுடன்) (21)
36. 1999 வாலி (20)
37. 1998 காதல் மன்னன் (19)
38. 1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (18)
39. 1998 உயிரோடு உயிராக (17)
40. 1998 அவள் வருவாளா (16)
41. 1997 ரெட்டை ஜடை வயசு (15)
42. 1997 ராசி (14)
43. 1997 பகைவன் (13)
44. 1997 நேசம் (12)
45. 1997 உல்லாசம் (11)
46. 1996 வான்மதி (10)
47. 1996 மைனர் மாப்பிள்ளை (9)
48. 1996 கல்லூரி வாசல் (8)
49. 1996 காதல் கோட்டை (7)
50. 1995 ராஜாவின் பார்வையினில்6)
51. 1995 ஆசை (5)
52. 1994 பாசமலர்கள் (4)
53. 1994 பவித்ரா (3)
54. 1993 அமராவதி (2)
55. 1992 பிரம்மபுஸ்தகம்தெலுங்கு (அறிமுகம)


1. அஜீத்தின் பூர்வீகம் பாலக்காடு.
தந்தை சுப்ரமணியம் தாய் மோகினிக்கு 1971-ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி
மகனாக பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
2. இரண்டு சகோதரர்கள். அண்ணன் அனுப், தம்பி அனில்.

3. ஆந்திரத்தில் பிறந்தாலும் சென்னை எழும்பூர் அசன் மேல்நிலை பள்ளியில் பத்தாவது வரை படித்தவர்.

4. இன்றும் சில இரவுகளில் காரில் பள்ளிக்கூடம் அருகில் வந்து பழைய
நினைவுகளில் அஜீத் மூழ்குவது வழக்கம்.

5. என்பீல்டு கம்பெனியில் வேலைப்பார்த்தவர் பிறகு துணிகளை ஏற்றுmaதி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்.

6. அடுத்தக்கட்டமாக மாடலிங் துறையில் ஈடுபட்டார்.

7. தன்னுடைய 20-வது வயதில் நடித்த தெலுக்கு படத்தின் டைரக்டர் இறந்து
விட படம் பாதியிலேயே நின்று போனது.

8. மே மாதம் பட வாய்ப்பு கை நழுவி போனபோது ஊடகத் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா இயக்குனர் செல்வாவிடம் அஜீத் புகைப்படத்தை காட்ட ‘அமராவதி’ படத்தின் நாயகனாகி விட்டார்.

9. அஜீத்தின் முதல் சம்பளத்தில் வாங்கிய பைக் இன்றும் பத்திரமாக
அவரிடம் இருக்கிறது.

10. அஜீத்திற்கு ரேஸ் பழக்கம் எப்படிஏற்பட்டதெனில் அவர் வேலைப்பார்த்த
நிறுவனத்தின் முதலாளி சென்னை சோழவரம் ரேஸ்களில் கலந்துக்கொள்வாராம். அவரைப் பார்த்து தான் அஜீத்திற்கு பைக் ரேஸ் மீது
ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
11. அமராவதி படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே விபத்தில்
சிக்கி முதுகுத் தண்டு வடத்தில் பாதிக்கப்பட்டு மீண்டார்.

12. ’பெடரேஷன் மோட்டார்ஸ் ஆப் இந்தியா’ போட்டியில் கலந்துக்கொண்டு 
5-வது இடத்தை பிடித்தார்.
13. ஆசை படம் இவரின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

14. அஜீத் எம்மதமும் சம்மதம் என்ற பாலிசியை உடையவர்.

15. அதை குறிக்கும் விதமாக வீட்டு சுவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மத சின்னங்களுடன் கல் பதிக்கப்பட்டிருக்கும்.

16. அஜீத் ஒருவரை பார்த்து விட்டால் அவர்களை அப்சர்வ் பண்ணுவதில் கில்லாடி.

17. அவர் வீட்டில் பால்ய கால நிகழ்வுகளின் புகைப்படங்களை
மாட்டி வைத்துள்ளார்.

18. அதைப்பற்றி தனது மகள் அநெளஷ்காவுக்கு அடிக்கடி சொல்வதுண்டு அஜீத்.

19. அஜீத்திற்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று புகைப்பட கிளிக்.

20. அஜீத் வீட்டில் சிறிய விளையாட்டு அரங்கு உள்ளது.

21. தன்னுடைய நண்பர்களுக்கு ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார்.

22. இயக்குனர் – நடிகர்களின் திறமைகளை வெளிப்படையாக பாராட்டுவார்.

23. இவரால் சமீபத்தில் வெளிப்படையாக பாராட்டப்பட்டவர் அட்டகத்தி தினேஷ்.

24. வெளிப்புற படப் பிடிப்பு என்றால் ஐதராபாத் இடம்பெற்றிருக்கும். ராமொஜி ராவ் திரைப்பட நகரத்தின் மீது அவருக்கு ஒரு காதல். பிறந்த மண் ஆயிற்றே.

25. இவரின் அண்மைக்கால சேகரிப்பு ஆத்திச்சூடி.. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

26. ஆத்திச்சூடியை பற்றிய விழிப்புணர்வு இல்லையே என்ற வருத்தம் அஜீத்திற்கு உண்டு,

27. தன்னுடைய பிறந்த நாளை பசுமைக் திரு நாளாக கொண்டாடசொல்வார்.

28. ஒவ்வொருவரும் மரக் கன்றுகள் நட வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

29. மனைவி ஷாலினியிடம் ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் ஐ லவ் யூ சொல்வது வழக்கம்.

30. அஜீத்தை ஷாலினி பேபி என்று தான் செல்லமாக அழைப்பார்.

31. நண்பர்களை தேடிச் சென்று மணிக்கணக்கில் பேசுவார்.

32. நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கர் அஜீத்தின் நெருங்கிய நணபர்.

33. ஞாபகசக்தி அதிகமுடையவர்.

34. தெரிந்தவர் என்றால் கைகுலுக்கி பேசுவார். மிகவும் தெரிந்தவரென்றால் தோல் மீது கைபோட்டு பேசுவார்.

35. துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர். சுயபாதுகாப்புக்காக பாயிண்ட் 32ரக துப்பாக்கி வைத்திருக்கிறார்.

36. தனது உதவியாளர்கலுடன் இரவு 7 மணிக்கு மேல் பேச வேண்டிய
நிலை ஏற்பட்டால் உங்களுடன் பேசலாமா?....நேரம் கிடைக்குமா?
என்ற குறுஞ்செய்தி அனுப்பி பதில் கிடைத்த பிறகே பேசுவார்.

37. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமையலறையில் காணலாம். பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்.

38. வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சீருடை மட்டுமல்ல. அவர்கள் வசிப்பதற்காக வீடுகளும் கொடுக்கிறார்.

39. அஜீத்திடம் வேலை பார்ப்பவர்கள் 14பேர். தனது வீட்டுத் தளம் போலவே
அவர்களின் வீட்டுத் தளமும் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

40. அஜீத்திடம் ஐந்து பைக்குகள் உண்டு. நீண்ட தொலைவு பயணத்துக்காக வாங்கியதில் தான் பெங்களூர், மும்பை என பயணம் செய்தார்.

41. அஜீத் தனிப்பட்ட சலுகை எதையும் விரும்புவதில்லை. விமான நிலையம் என்றாலும் சரி வாக்குச்சாவடியாக இருந்தாலும் சரி வரிசையில் தான் நிற்பார்.

42. பட்டதாரி இல்லை என்றாலும் ஆங்கிலம், இந்தி, பிரெஞ் தெரியும்.

43. ஒரு நாட்டின் குடிமகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரிய வேண்டுமோ அது அஜீத்திற்கு தெரியும்.




Wednesday, July 15, 2015

காமராஜர் காலம் ஏன் பொற்காலம்? | Why Kamarajar period was golden days??


1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்...
காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.

இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

முதல் திருத்தத்தின் மூலவர்
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

சமூக நீதிக்கான ஆட்சி
தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

கல்விப் புரட்சி

காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்...
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம். 

அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.
எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

தொழில் வளர்ச்சி
ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன. 
1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்... 
 இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

பாசனத் திட்டங்கள்
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.
கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். 
 இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.

மின்உற்பத்தி
காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.
மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…
 சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

நிலச் சீர்திருத்தம்
காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் வளர்ச்சி
சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எளிமை நேர்மை - தூய்மை
எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

பெரியாரின் வார்த்தைகள்
காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.
1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.
தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?

இன்று காமராஜர் பிறந்த நாள்


[thanks to The Hindu ]