சென்னை: இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார்தான் படுகொலை செய்த கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சுவாதி கொல்லப்பட்டது முதல் ராம்குமார் கைது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 24-ந் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாதியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு சுவாதியின் பின்னால் நின்றிருந்த மர்மநபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்.
ரயில் பயணிகள் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுவாதியை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடல் 3 மணி நேரமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திலே இருந்தது.
காலை மணிக்கு பின்னரே ரயில்வே காவல் துறையினர் சுவாதியின் உடலை அப்புறப்படுத்தினர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில் சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது.
==ஜூன் 25==
போலீசார் அந்த நபர் தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களில் வெளியிட்டனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சவுராஷ்டிரா நகரில் உள்ள மற்றொரு வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
சுவாதி படுகொலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.
==ஜூன் 26==
சுவாதி படு கொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடமிருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சுவாதியின் செல்போன் உரையாடல்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.
==ஜூன் 27==
ஸ்டாலின், குஷ்பு, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், தமிழிசை ஆகியோர் சுவாதியின் பெற்றோரை சந்தித்தனர்.
சுவாதி கொலையாளியை கண்டுபிடிக்க முடியாததால் போலீசாருக்கு எதிர்ப்பு வலுத்தது.
==ஜூன் 28==
சுவாதி படுகொலை வழக்கை தாமே முன்வந்து வழக்கை எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சுவாதி கொலை வழக்கில் முன்னேற்றமில்லை என்றால் நீதிமன்றமே விசாரணையை நடத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
==ஜூன் 29==
சுவாதியின் பேஸ்புக் அக்கவுண்ட் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டது.
சுவாதியின் படுகொலையில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக நடிகர்கள் ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர் ஆகியோர் ஃபேஸ்புக் பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
==ஜூன் 30==
நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் தப்பி ஓடிய நபர்தான் கொலையாளி என தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்.
சுவாதி செல்போன் கடைசியாக சூளைமேட்டில் சிக்னலில் இயங்கியது.
பின்னர் கொலையாளி தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மேன்சனில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்
மேன்சன் காவலாளி மற்றும் மேனேஜர் அளித்த தகவலின் பேரில் குற்றவாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என உறுதியானது.
==ஜூலை 1==
செங்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
நேற்று காலை முதல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குற்றவாளி ராம்குமாரை போலீசார் தீவிரமாக கண்கானித்தனர்.
ஆடு மேய்த்து விட்டு மாலையில் வீடு கொலையாளி ராம்குமார் வீடு திரும்பிய பின்னரும் போலீசார் கண்காணித்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் ராம்குமாரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர்.
ஆனால் போலீசாரை பார்த்த ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
ராம்குமாரை போராடி கைது செய்த போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ராம்குமார், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் பேசினார்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராம்குமார், சுவாதியை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.