: : ஆரம்பம் படம் பற்றி விஷ்ணுவர்த்தன் : :தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என்று நினைப்பவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். |
இவர் அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் அதிரடியாக பிரமாண்ட படமொன்றை இயக்கியுள்ளார். இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரகாசமான சூரியனை சுற்றி வரும் கோள்கள் தான். இந்த படத்திலும் அஜித் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் நடித்து அதிர வைத்துள்ளார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார். இந்த ஸ்டைல் வேறு யாருக்காவாவது கச்சிதமாக அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே, இது ஒரு விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான, ரசிகர்களை மிரள வைத்த பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
(share this with ajithians)
|
Thursday, August 1, 2013
ஆரம்பம் படம் பற்றி விஷ்ணுவர்த்தன் | Vishnu about Thala's Aarambam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment