இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலரை தூக்கிவிட்டு திமிராக திரியும் ஆட்கள், இவர்களது காதல் கடிதங்கள் பலவன பாலைவன மலர்களாகி போனவை என்பது இவர்களது மனது மட்டுமே அறிந்த ஒன்று. ஆயினும் இவர்கள் பெண்கள் மெச்சும் கணவர்களாக இருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட நம்புங்க பாஸ்!! பொண்ணுகளே சொல்றாங்க மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க தான் அவங்கள தாங்குறாங்களாம்!!
கௌதம் மேனன் சினிமாவை கண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்ன அவ்வளவு கெத்தா என கேட்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இன்ஜினியரிங் மாணவராக இருந்திருக்க முடியாது. கலை அறிவியல் அல்லது மருத்துவம் படித்தவர்களுக்கு வேண்டுமானாலும் இந்த சந்தேகம் வரலாமே தவிர இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அல்ல.
என்னய்யா ரொம்ப சீன் போடுறீங்க அப்படி என்ன மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க பொண்டாட்டிய ரொம்ப பெருசா பாத்துக்கிட்டாங்கன்னு நீங்க கேட்டா? பொண்ணுங்க சொன்ன இந்த விஷயத்தை எல்லாம் நீங்களே படிச்சு தெரிஞ்சுக்குங்க...
1) பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்...
நான்கு வருடம் பெண்களை தூரம் நின்றே ரசித்த இவர்கள். தங்களுக்கென்று கிடைத்த அழகு பதுமையை குழந்தை போல பார்த்துக் கொள்கிறார்களாம்.
2) மறதி இல்லாதவர்கள்...
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆயிரக்கணக்கான ஃபார்முலாவினை மனம்பாடம் செய்த இவர்கள் அவ்வளவு எளிதில் முக்கியமான நாட்களை மறக்க மாட்டார்களாம். இது ஆண்களிடம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.
3) ஏமாற்ற மாட்டார்கள்...
கல்லோரியிலும் சரி, அலுவலகத்திலும் சரி பெண்கள் பெரும்பாலும் இல்லாத சுற்றுசூழலில் வாழ்பவர்கள் என்பதால், இவர்கள் தங்களது மனைவியை ஏமாற்றமாட்டார்கள் என பெண்கள் கருதுகின்றனர்.
4) வியப்பூட்டும் பரிசுகள்....
கரடி பொம்மை, கிரீட்டிங் கார்டுகளுக்கு எல்லாம் டாட்டா சொல்லிவிட்டார்கள் பெண்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க தரும் வியப்பூட்டும் ரோபோ பரிசுகள் தான் அவர்களை வியக்க வைக்கிறது.
5) கார்களில் சுற்றுப்பயணம்...
உயர்ரக கார்கள் இல்லாவிடினும், தாங்கள் வைத்திருக்கும் கார்களை சொகுசாக வடிவமைக்க தெரிந்தவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க. பொதுவாகவே ஊர்சுற்ற பிடித்த பெண்கள் இவர்களுடன் திருமணத்திற்கு பின் இவர்களது சொகுசான கார்களில் ஊர் சுற்ற அதிகம் விரும்புகின்றனர்.
6) அதிக நேரம் செலவிடுவார்கள்...
ஐ.டி. வேலைகளில் லட்சங்களில் சம்பிதிப்பவர்களை விட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க அதிக நேரம் அவரது மனைவியுடன் செலவிடுகின்றனர். இவையெல்லாம் பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களாக கூறப்படுகிறது.
7)வீட்டு வேலைகள்...
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க இருந்தால் வீட்டு வேலைகள் செய்வது சுலபம் என கருதுகின்றனர். சம்சாரத்தில் இருந்து மின்சாரம் வரை அனைத்து வீட்டு வேலைகளையும் கட்சிதமாய் செய்து முடிக்கிறார்களாம் இவர்கள்.
8) ஷாப்பிங் செய்யும் போது காத்திருப்பார்கள்...
மொக்கையான வகுப்புகளையே மணிக்கணக்கில் உட்கார்ந்து கவனித்த அவர்களுக்கு பொறுமை அதிகம். அதனால் ஷாப்பிங் செய்யும் போது பொறுமையாக இருப்பார்களாம்.
9) கனவுகளை நிறைவேற்றுபவர்கள்...
தாங்கள் விரும்பிய படிப்பினை படித்து முடித்த அவர்களுக்கு கனவு மெய்படுவதன் உணர்வை அறிந்தவர்கள். எனவே, அவர்களது மனைவியின் கனவுகளையும் நிறைவேற்றுவார்கள்.
"Proud to b a MECHANICAL ENGINEER"
[source: whatsapp]
No comments:
Post a Comment