Sunday, October 27, 2013

'தல' பற்றிய சில உண்மையான விஷயங்கள்!


Aarambam

ஒரு தனி மனித போராட்டத்தின் வெற்றி தான் இன்று தமிழகமாய் திகழும் அஜீத் அவர் சந்தித்த தோல்விகளையும் பிரச்சனைகளையும் வேறு ஒரு நடிகர் சந்தித்திருந்தால் இன்று அவர்கள் சினிமாவில் இருந்திருக்கமாட்டார்கள் அடிப்படை குடும்ப உதவி இல்லாததால் ஒதுக்கப்பட்டார்

பேச தெரியாது என்றனர் கண்களால் பேசி விருது வாங்கினார் (வாலி) 

ஆண்மை இல்லாதவன் என்று கூச்சலிட்டனர் தேவதை போன்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்து கூச்சலிட்டவர் முகத்தில் சாயம் பூசினான்

புறம்பேசுபவன் நேர்பட பேச தைரியமில்லாதவன் என்றனர் முதலமைச்சர் முன்பு ரஜினி எழும்பி கைதட்டும் அளவுக்கு தைரியமாக பேசினார் (பாச தலைவனுக்கு பாராட்டு விழா)

நடிக்க தெரியாதவன் என்றனர் விருது வாங்கினான் வில்லன் படத்துக்காக

உன்னை இந்த சினிமாவிலிருந்தே விரட்டுவேன் என்றவன், கடன் பிரச்சனையிலிருந்து மீள உதவுங்கள் என கெஞ்சுகிறான் (A.M.ரத்னம்)

நடனம் ஆட தெரியாது என்று கிண்டல் செய்தனர். வரலாறு படத்தில் அமர்களமாய் நடனமாடி விருது வாங்கினான்

நான் கத்திருப்பது சூர்யாவுக்காகவும் கமலுக்காகவும் தான் தல என்றால் யார் என்று கேட்ட கௌதம் மேனன் கதி என்ன? தொடர் தோல்விகளில் இருந்து மீள உதவுகிறார் 55வது படம் மூலம் .

தலைகனம் பிடித்தவன் வெட்டி புகழை தேடுகிறான் என்றனர் அமைதி என்னும் ஆயுதத்தால் வீழ்த்தினான் விரோதிகளை.

விபத்தில் அடிபட்டு எழும்பி நடக்க முடியாதவனாய் படுத்திருந்தான் ஒருவனும் உதவவில்லை.,


பணக்கஷ்டம் தொடரர் தோல்வி எதிரிகளின் கூச்சல் ஒருவரிடமும் கை நீட்டாமல் தன் திறமையை கொண்டு உயிரை பணைய வைத்து கார் மற்றும் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்று கோப்பையோடு வந்தான்

ஒன்றல்ல இரண்டல்ல இவன் பட்டது ஓராயிரம் கஷ்டம், துன்பம், இகழ்ச்சி இவையனைத்தையும் இதயத்தில் சுமந்தான். என்னால் முடியும் சாதித்து காட்டுவேன் என்று மெல்ல மெல்ல எழுந்தான்., உதைத்தனர் மீண்டும் எழுந்தான் ..!! எழுந்தான்.,!!! சென்றான் உச்சத்தில் காலடியில் காத்திருக்கின்றனர் எதிரிகள் அஜீத்தின் வார்த்தைக்காக

இப்போது சொல்லுங்கள் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் மனிதன் முடியாதவனா???? சோம்பேறியா???? கூத்தாடியா???
உழைத்து முன்னேறு தோல்வியினால் துவழாதே எழுந்து வா? வீணாக பணத்தை செலவளிக்காதே, காலத்தை வீணடிக்காதே, நேரமிருந்தால் மட்டும் என் படத்தை பார், அளவுக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவர்களுக்கு கொடு என்று சொல்பவனை அழிக்க ஆயிரம் கைகள்.

சூரியனை கையால் மறைக்க முடியாது
கடல்நீரை இறைத்து தீர்த்துவிட முடியாது
கடல் மணலை எண்ணி விட முடியாது
வானத்தை அளந்து விட முடியாது
அதுபோல
எங்கள் உயிர்நாடி தல அஜீத் குமாரை அழிக்கவும் முடியாது அவர் இடத்தை பிடிக்கவும் முடியாது

உன் புகழ் ஓங்கட்டும் என் உயிர் உள்ளவரை உன்னை என் வாழ்க்கையின் வழிகாட்டியாவும், உன் ரசிகனாகவும் இருப்பேன்
இன்னொரு ஜென்மம் இருந்தால் உனக்கு தம்பியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

Pls like & share it 







Saturday, October 19, 2013

DIWALI Dhamaka Movie list in TV! - 2013


Advance DIWALI wishes to all!


Diwali movie list in South-Indian TV channels:-

:: SUN TV ::
Singam2 & Kanna laddu thinna aasaya


:: KALAINGAR TV ::
Sonna Puriyadhu


:: VIJAY TV ::
Vishwaroopam & Aadhalaal kaathal seiveer


:: ZEE THAMIZH ::
Soothu kavum



Monday, October 7, 2013

'தல'யின் அதிரடி பேட்டி!





THALA

'தல'தீபாவளியாக இந்த வருடம் அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

அதைத் தொடர்ந்து வீரம் திரைப்படம் பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்கவுள்ளது.

அதற்கான விருவிருப் பணிகளில் பிஸியாகயிருந்தவரிடம் கேள்விகளை சரவெடியாக விரித்ததும் தனது ஸ்டைலில் வெடித்த பதில்களின் சிதறல் இங்கே.


கேள்வி: உங்களது ஆரம்பம், வீரம் படங்களின் கதாபாத்திம் குறித்து?
பதில்: நான் ஆரம்பம் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறேன். பில்லா, மங்கத்தா படத்தில் பார்த்த ஸ்டைலிஷ் அஜித்தை இப்படத்திலும் நீங்கள் பார்க்கலாம்.
ஆனால் வீரம் முற்றிலும் மாறுபட்டது. இதில் எனக்கு கிராமத்து கதாபாத்திரம்.


கேள்வி: இதுவரை நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம்?
பதில்: நான் ஒரு நடிகன், சம்பளம் கொடுக்கிறார்கள் நடிக்கிறேன், இதுவரை காதல், இளமை, மற்றும் வயது முதிர்ந்தவன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.
எப்போதும் திரைக்கதையையே நம்புவேன், ஆனால் எல்லா நேரத்திலும் கதை சாதகமாக அமைவதில்லை. சில நேரங்களில் இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப நடித்துக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை.
மொத்தத்தில் இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரும் ஒருங்கிணைந்தால் ஒரு நல்ல படத்தினை தர முடியும்.


கேள்வி: நீங்கள் இயக்குனரின் நடிகரா?
பதில்: ஒரு நடிகரின் திறமையை வெளிகொண்டு வருபவர் இயக்குனர், ஆனால், படங்களில் நடிக்கும்போது நாம் சில கருத்துக்களை சொல்லலாம்.ஆனால், இயக்குனரின் படைப்பாற்றல் மீது உரிமை மீறாமல் நமது திறமையை வளர்த்துக்கொள்வதே சிறந்தது.


கேள்வி: இதுவரை நடித்ததில் உங்களுக்கு திருப்தி அளித்த கதாபாத்திரம்?
பதில்: என்னுடைய இளம் வயதில் காதல் ததும்பும் ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடித்தேன். பின்பு ஏற்கும் கதாபாத்திரங்களில் என்னுடைய தோற்றத்திற்கு தகுந்தவாறு கதாபாத்திரங்களை தெரிவு செய்தேன், மங்காத்தா, பில்லா போன்ற படங்களில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றினேன். அதில் நடித்ததால் ஆரம்பம் படத்திலும் இந்த கெட்டப்பை தொடர்ந்துள்ளேன்.


கேள்வி: உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடிப்பதற்கு அதிரடியாக களமிறங்குகிறீர்களே?
பதில்: விபத்து மற்றும் உடல்நல பாதிப்பு நம்முடைய வேலையில் ஒரு பாதி. அப்படி உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் எனக்கு நல்ல மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்கள் வெகுவிரைவில் எனது உடல்நலனை சரிசெய்து விடுவார்கள்.தற்போதுள்ள ரசிகர்கள் ஆக்ஷ்ன் காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள், என்னுடைய படத்தினை பார்க்க வரும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடாது என்பதற்காக எனது கடமையை செய்கிறேன்.


கேள்வி: டிரைவிங்கில் வேகம் மற்றும் பாதுகாப்பை விரும்புகிறீர்களே ஏன் இந்த வினோதமான முயற்சி?
பதில்: நான் 18 வயது முதல் கார் மற்றும் பைக் பந்தயங்களில் பங்கேற்று வருகிறேன். நான் எச்சரிக்கையுடன் வேகத்தை விரும்பும் ஒரு பந்தயக்காரன். இப்போதும் வாகனம் ஒட்டும்போது ஹெல்மெட், க்ளவ்ஸ் போன்றவற்றை பயன்படுத்தியே எனது பயணத்தை தொடங்குவேன்.


கேள்வி: நடிப்பு, ரேசிங் தவிர 'தல'யின் சாய்ஸ்?
பதில்: நான் வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்கள் ஏரோ மாடலிங் படித்தது சிறந்ததாக கருதுகிறேன். ஏனெனில் எனது அடுத்த சாய்ஸ் ஏரோ மாடலிங் ஆனால் சில காரணங்களால் பிரைவேட் பைலட் உரிமம் வாங்க முடியவில்லை.
மேலும் புகைப்படத்திலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது, ஆனால் சில வணிக காரணங்களுக்காக அதனை செய்யாமல் இருக்கிறேன்.