அஜீத் - 42 | அஜீத் பற்றி சில சுவாரஸ்யங்கள்…
1) சிகரெட் தியாகம் :
திருமணத்திற்கு முன்பு அஜீத் சிகரெட்டை சும்மா ஸ்டாலாக ஊதித் தள்ளுவாராம். ஷாலினியை காதலித்து திருமணம் செய்த பின்னர் மனைவிக்காக சிகரெட்டை தியாகம் செய்தாராம்.
2) சாய்பாபா பக்தர் :
தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும்
பாபாவின் முன்பு வைத்து கும்பிட்டு
விட்டுத்தான் பயன்படுத்துவார்!
3) இடது கைப் பழக்கம் :
வெளி இடங்களில் தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை
குடிக்க வேண்டி வந்தால் இடது கையால் தான்
கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது
கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட
பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த
முன்னெச்சரிக்கை!
4) அனைவருக்கும் ‘தல’ :
சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள்
ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
5 ) பிரியாணி எக்ஸ்பர்ட் :
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில்
எக்ஸ்பர்ட். நண்பர்களுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து கொடுப்பார்.
6) புது உணவுக்கு பாராட்டு :
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார்.
அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் கூப்பிட்டு
பாராட்டுவார்.
7) கிரிக்கெட் பிரியர் :
கிரிக்கெட், கேமரா காதலர். படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட்
பிரியர். பைக் ரேஸ் போல கேமரா மீதும் அஜீத்துக்கு காதல் அதிகம்.
நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து
தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
தவிர்க்க முடியாது :
நீங்கள் நேசிக்கலாம்... அல்லது வெறுக்கலாம்... ஆனால் அவரை தவிர்க்க
முடியாது இந்த வார்த்தைகளுக்கு பொருத்தமாய் இருக்கிறார் அஜீத் !!!
(thanks to Ajith Kumar [ one man army ])
No comments:
Post a Comment