Tuesday, July 21, 2015

வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க ரூ.640 கோடியில் புதிய திட்டம்!


 லண்டன்: பிரபஞ்சத்தில் வேறு கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய ரூ. 640 கோடியில் புதிய திட்டம் ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்கு ரஷ்ய தொழில் அதிபர் யூரி மில்னர் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன. சூரியன் என்ற சிறிய நட்சத்திரத்தை சுற்றி வரும் பூமியில் உயிர்கள் வாழ்கின்றன. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த வான்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேறுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை  ஆராய  புதிய ப்ராஜக்ட் ஒன்றை நேற்று லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளில்  ரூ.640 கோடி செலவழிக்கப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபார் யூனி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். இந்த திட்டம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகையில், எல்லை இல்லாத இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளது. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையிலிருந்து அறிவுபூர்வமான உயிர்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம். பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கிறதா என்ற கேள்வியைக் காட்டிலும் வேறு மிகப்பெரிய கேள்வி இருக்க முடியாது. இதற்கான விடையை தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.


[thanks to dinakaran web]

No comments:

Post a Comment