சென்னையில் இருந்து மலேசிய நகர் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டது. அதில், 164 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அவர், நிலவரம் குறித்து தெரிவித்தார். அதிகாரிகளின் உத்தரவுப்படி மாலை 5.20 மணிக்கு அவசரமாக விமானம் தரையிறங்கியது.
பயணிகள் அனைவரையும் விமானத்திலேயே உட்கார வைத்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த பொறியாளர் குழுவினர், விமானத்துக்குள் சென்று, இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு 8 மணி வரை முடியவில்லை. விமானம் எப்போது புறப்படும் என தெரியாத நிலை நிலவியது. இதனால், விமான பயணிகளுக்கு தேவையான உணவு வழங்கினர். விமானியின் சாதுர்ய நடவடிக்கையால் பயணிகள் உயிர்தப்பினர்.
[thanks dinakaran]
No comments:
Post a Comment