|
THALA |
'தல'தீபாவளியாக இந்த வருடம் அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து வீரம் திரைப்படம் பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்கவுள்ளது.
அதற்கான விருவிருப் பணிகளில் பிஸியாகயிருந்தவரிடம் கேள்விகளை சரவெடியாக விரித்ததும் தனது ஸ்டைலில் வெடித்த பதில்களின் சிதறல் இங்கே.
கேள்வி: உங்களது ஆரம்பம், வீரம் படங்களின் கதாபாத்திம் குறித்து?
பதில்: நான் ஆரம்பம் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர்
லுக்கில் நடிக்கிறேன். பில்லா, மங்கத்தா படத்தில் பார்த்த ஸ்டைலிஷ் அஜித்தை
இப்படத்திலும் நீங்கள் பார்க்கலாம்.
ஆனால் வீரம் முற்றிலும் மாறுபட்டது. இதில் எனக்கு கிராமத்து கதாபாத்திரம்.
கேள்வி: இதுவரை நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம்?
பதில்: நான் ஒரு நடிகன், சம்பளம் கொடுக்கிறார்கள்
நடிக்கிறேன், இதுவரை காதல், இளமை, மற்றும் வயது முதிர்ந்தவன் என பல்வேறு
கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.
எப்போதும்
திரைக்கதையையே நம்புவேன், ஆனால் எல்லா நேரத்திலும் கதை சாதகமாக
அமைவதில்லை. சில நேரங்களில் இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப
நடித்துக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை.
மொத்தத்தில் இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரும் ஒருங்கிணைந்தால் ஒரு நல்ல படத்தினை தர முடியும்.
கேள்வி: நீங்கள் இயக்குனரின் நடிகரா?
பதில்: ஒரு நடிகரின் திறமையை வெளிகொண்டு வருபவர் இயக்குனர், ஆனால், படங்களில் நடிக்கும்போது நாம் சில கருத்துக்களை சொல்லலாம்.ஆனால், இயக்குனரின் படைப்பாற்றல் மீது உரிமை மீறாமல் நமது திறமையை வளர்த்துக்கொள்வதே சிறந்தது.
கேள்வி: இதுவரை நடித்ததில் உங்களுக்கு திருப்தி அளித்த கதாபாத்திரம்?
பதில்: என்னுடைய இளம் வயதில் காதல் ததும்பும் ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடித்தேன். பின்பு ஏற்கும் கதாபாத்திரங்களில் என்னுடைய தோற்றத்திற்கு தகுந்தவாறு
கதாபாத்திரங்களை தெரிவு செய்தேன், மங்காத்தா, பில்லா போன்ற படங்களில்
சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றினேன். அதில் நடித்ததால் ஆரம்பம் படத்திலும் இந்த கெட்டப்பை தொடர்ந்துள்ளேன்.
கேள்வி: உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடிப்பதற்கு அதிரடியாக களமிறங்குகிறீர்களே?
பதில்: விபத்து மற்றும் உடல்நல பாதிப்பு நம்முடைய
வேலையில் ஒரு பாதி. அப்படி உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் எனக்கு நல்ல
மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்கள் வெகுவிரைவில் எனது உடல்நலனை சரிசெய்து
விடுவார்கள்.தற்போதுள்ள
ரசிகர்கள் ஆக்ஷ்ன் காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள், என்னுடைய படத்தினை
பார்க்க வரும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடாது என்பதற்காக எனது கடமையை
செய்கிறேன்.
கேள்வி: டிரைவிங்கில் வேகம் மற்றும் பாதுகாப்பை விரும்புகிறீர்களே ஏன் இந்த வினோதமான முயற்சி?
பதில்: நான் 18 வயது முதல் கார் மற்றும் பைக்
பந்தயங்களில் பங்கேற்று வருகிறேன். நான் எச்சரிக்கையுடன் வேகத்தை
விரும்பும் ஒரு பந்தயக்காரன். இப்போதும் வாகனம் ஒட்டும்போது ஹெல்மெட்,
க்ளவ்ஸ் போன்றவற்றை பயன்படுத்தியே எனது பயணத்தை தொடங்குவேன்.
கேள்வி: நடிப்பு, ரேசிங் தவிர 'தல'யின் சாய்ஸ்?
பதில்: நான் வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்கள் ஏரோ
மாடலிங் படித்தது சிறந்ததாக கருதுகிறேன். ஏனெனில் எனது அடுத்த சாய்ஸ் ஏரோ
மாடலிங் ஆனால் சில காரணங்களால் பிரைவேட் பைலட் உரிமம் வாங்க முடியவில்லை.
மேலும் புகைப்படத்திலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது, ஆனால் சில வணிக காரணங்களுக்காக அதனை செய்யாமல் இருக்கிறேன்.
|
No comments:
Post a Comment