Sunday, October 27, 2013

'தல' பற்றிய சில உண்மையான விஷயங்கள்!


Aarambam

ஒரு தனி மனித போராட்டத்தின் வெற்றி தான் இன்று தமிழகமாய் திகழும் அஜீத் அவர் சந்தித்த தோல்விகளையும் பிரச்சனைகளையும் வேறு ஒரு நடிகர் சந்தித்திருந்தால் இன்று அவர்கள் சினிமாவில் இருந்திருக்கமாட்டார்கள் அடிப்படை குடும்ப உதவி இல்லாததால் ஒதுக்கப்பட்டார்

பேச தெரியாது என்றனர் கண்களால் பேசி விருது வாங்கினார் (வாலி) 

ஆண்மை இல்லாதவன் என்று கூச்சலிட்டனர் தேவதை போன்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்து கூச்சலிட்டவர் முகத்தில் சாயம் பூசினான்

புறம்பேசுபவன் நேர்பட பேச தைரியமில்லாதவன் என்றனர் முதலமைச்சர் முன்பு ரஜினி எழும்பி கைதட்டும் அளவுக்கு தைரியமாக பேசினார் (பாச தலைவனுக்கு பாராட்டு விழா)

நடிக்க தெரியாதவன் என்றனர் விருது வாங்கினான் வில்லன் படத்துக்காக

உன்னை இந்த சினிமாவிலிருந்தே விரட்டுவேன் என்றவன், கடன் பிரச்சனையிலிருந்து மீள உதவுங்கள் என கெஞ்சுகிறான் (A.M.ரத்னம்)

நடனம் ஆட தெரியாது என்று கிண்டல் செய்தனர். வரலாறு படத்தில் அமர்களமாய் நடனமாடி விருது வாங்கினான்

நான் கத்திருப்பது சூர்யாவுக்காகவும் கமலுக்காகவும் தான் தல என்றால் யார் என்று கேட்ட கௌதம் மேனன் கதி என்ன? தொடர் தோல்விகளில் இருந்து மீள உதவுகிறார் 55வது படம் மூலம் .

தலைகனம் பிடித்தவன் வெட்டி புகழை தேடுகிறான் என்றனர் அமைதி என்னும் ஆயுதத்தால் வீழ்த்தினான் விரோதிகளை.

விபத்தில் அடிபட்டு எழும்பி நடக்க முடியாதவனாய் படுத்திருந்தான் ஒருவனும் உதவவில்லை.,


பணக்கஷ்டம் தொடரர் தோல்வி எதிரிகளின் கூச்சல் ஒருவரிடமும் கை நீட்டாமல் தன் திறமையை கொண்டு உயிரை பணைய வைத்து கார் மற்றும் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்று கோப்பையோடு வந்தான்

ஒன்றல்ல இரண்டல்ல இவன் பட்டது ஓராயிரம் கஷ்டம், துன்பம், இகழ்ச்சி இவையனைத்தையும் இதயத்தில் சுமந்தான். என்னால் முடியும் சாதித்து காட்டுவேன் என்று மெல்ல மெல்ல எழுந்தான்., உதைத்தனர் மீண்டும் எழுந்தான் ..!! எழுந்தான்.,!!! சென்றான் உச்சத்தில் காலடியில் காத்திருக்கின்றனர் எதிரிகள் அஜீத்தின் வார்த்தைக்காக

இப்போது சொல்லுங்கள் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் மனிதன் முடியாதவனா???? சோம்பேறியா???? கூத்தாடியா???
உழைத்து முன்னேறு தோல்வியினால் துவழாதே எழுந்து வா? வீணாக பணத்தை செலவளிக்காதே, காலத்தை வீணடிக்காதே, நேரமிருந்தால் மட்டும் என் படத்தை பார், அளவுக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவர்களுக்கு கொடு என்று சொல்பவனை அழிக்க ஆயிரம் கைகள்.

சூரியனை கையால் மறைக்க முடியாது
கடல்நீரை இறைத்து தீர்த்துவிட முடியாது
கடல் மணலை எண்ணி விட முடியாது
வானத்தை அளந்து விட முடியாது
அதுபோல
எங்கள் உயிர்நாடி தல அஜீத் குமாரை அழிக்கவும் முடியாது அவர் இடத்தை பிடிக்கவும் முடியாது

உன் புகழ் ஓங்கட்டும் என் உயிர் உள்ளவரை உன்னை என் வாழ்க்கையின் வழிகாட்டியாவும், உன் ரசிகனாகவும் இருப்பேன்
இன்னொரு ஜென்மம் இருந்தால் உனக்கு தம்பியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

Pls like & share it 







No comments:

Post a Comment