Sunday, June 14, 2015

20Pts About Thala - Exclusive!

‘தல’ அஜித் பற்றி வெளிவந்த உண்மை..! 

‪#1 ‎அஜீத்‬ பிறந்தது 1971ம் ஆண்டு மே 1ந் தேதி. அப்பா சுப்பிரமணியம்
மலையாளி, அம்மா மோகினி சிந்து.
பிறந்தது ஆந்திர மாநிலம்
ஐதராபாத்தில், வளர்ந்தது
தமிழ்நாட்டில், மொத்தத்தில் அஜீத் ஒரு
தனிமனித பாரத விலாஸ்.

2. படிப்பு 10ம் வகுப்பு வரைதான்.
அதன் பிறகு மோட்டார் சைக்கிள்
மெக்கானிக் ஷாப்பில் வேலை
பார்த்தார். அங்குதான் அவருக்கு பைக்
மற்றும் கார் மீது காதல் உண்டானது.

3. பைக் ரேஸ் அவருக்கு பிடித்த
விளையாட்டு. உலகின் சிறந்த கார்
அல்லது பைப் ரேஸராக வரவேண்டும்
என்பதுதான் அவரது லட்சியம். அந்த
லட்சியத்துக்காக சின்ன சின்ன
விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

4. திருப்பூரில் ஆயத்த ஆடை
நிறுவனத்தை தொடங்கினார். தொழிலில்
நேர்மையாக இருந்ததால் லாபம்
சம்பாதிக்க முடியாமல் நிறுவனத்தை
இழுத்து மூடினார். அதன் பிறகு
நடிப்பு தான் இனி வாழ்க்கை என்று
முடிவு செய்தார்.

5. தனது நண்பர் சுரேஷ் சந்திராவின்
ஸ்கூட்டரின் பின்னால் உட்கார்ந்து
கொண்டு, ஆல்பத்தை கையில் ஏந்திக்
கொண்டு ஒவ்வொரு தயாரிப்பு
அலுவலகமாக ஏறி இறங்கினார். அதே
சுரேஷ் சந்திராதான் இப்போதும்
அவரது நண்பர், உதவியாளர்,
மானேஜர், மக்கள் தொடர்பாளர் எல்லாம்.

6. என் வீடு என் கணவர் படத்தில்
சின்ன கேரக்டரில் நடித்ததுதான்
அஜீத்தின் முதல் படம். வெளிவந்த
ஆண்டு 1990.

7. ஹீரோவாக முதலில் நடித்தது
பிரேமபுஸ்தகம் என்ற தெலுங்கு படம்.
அது 1992ல் வெளிவந்தது. அப்போது
வயது 21. தமிழில் நடித்த முதல் படம்
அமராவதி. முதல் ஹீரோயின் சங்கவி,
முதல் இயக்குனர் செல்வா.

8. அமராவதி படத்தில் அஜீத்துக்கு
டப்பிங் குரல் கொடுத்தவர் அன்றைக்கு
டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த
விக்ரம். ஆசை படத்தில் டப்பிங் குரல்
கொடுத்தவர் பன்னீர் புஷ்பங்கள்
சுரேஷ்.

9. அமராவதி படப்பிடிப்பில் பைக்
விபத்தில் சிக்கினார். அதன் பிறகு 18
மாதங்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு
பூரண குணமடைந்தார். அடுத்த
படமான பவித்ராவில் பைக் விபத்தில்
சிக்கிய இளைஞனாகவே நடித்தார்.
இதுவரை 13 விபத்துக்களில் சிக்கிய
அஜீத்தின் உடம்பில் 20க்கும் மேற்பட்ட
அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இப்போதும் ஒரு பை நிறைய மாத்திரை
வைத்திருப்பார்.

10. அம்மா பாசம் அதிகம். தினமும்
வெளியில் செல்லும்போது அம்மாவை
வணங்கிவிட்டுத்தான் செல்வார்.

11. விமானியாக வேண்டும் என்று
விரும்பி அதற்கான பயிற்சி எடுத்தார்.
சினிமா வாய்ப்பு கிடைக்கவே விமானி
ஆசையை துறந்தார்.

12. வஸந்த் இயக்கிய ஆசை படம்தான்
அடையாளம் கொடுத்தது. வரலாறு
படத்தில் பெண்தன்மை கொண்ட
கேரக்டரிலும், வில்லன் படத்தில்
மாற்றுத் திறனாளியாகவும், வாலி
படத்தில் வில்லனாகவும், சிட்டிசன்
படத்தில் வயதானவராகவும் நடித்து
தனது நடிப்பு திறமையை நிரூபித்தார்.

13. ஷாலினியை சந்தித்தது அமர்களம்
படப்பிடிப்பில். கண்டதும் காதல்.
காதலித்ததும் கல்யாணம். புகழின்
உச்சியில் இருந்த ஷாலினி நல்ல
மனைவியாக வாழ தீர்மானித்து
சினிமாவிட்டு விலகினார். இன்று
வரை ஆதர்ச தம்பதிகளாக
வாழ்கிறார்கள்.

14. ஷாலினி பேட்மிட்டன்
விளையாட்டு வீராங்கனை இதற்காக
தன் வீட்டிலேயே மனைவிக்கு ஒரு
விளையாட்டு மைதானத்தை
அமைத்து கொடுத்திருக்கிறார்.

15. தன்னிடம் பணியாற்றும் அத்தனை
பணியாளர்களுக்கும் சொந்தமாக வீடு
கட்டிக் கொடுத்திருக்கிறார்.

16. எவ்வளவு முக்கிய வேலையாக
இருந்தாலும் இரவு 7 மணிக்கு மேல்
யாரையும் அழைக்க மாட்டார்.

17. விலை உயர்ந்த செல்போனை
பயன்படுத்த மாட்டார். மிக குறைவான
எண்களே அவரது போனில் இருக்கும்.
யாரிடம் பேசினாலும் “ப்ரீயா
இருக்கீங்களா பேசலாமா என்று
அனுமதி கேட்டுவிட்டுத்தான்
பேசுவார்.

18. உள்ளூரில் இருந்தால் மாருதி
ஸ்விப்ட் காரையும், வெளியூரில்
இன்னோவா காரையும்
பயன்படுத்துவார். மேக்-அப்
போடவில்லை என்றால் தானே காரை
ஓட்டிச் செல்வார்.

19. தான் குடியிருக்கும் பகுதி
தெருக்களில் சர்வசாதாரணமாக
சைக்கிளில் செல்வார். தெரு
குழந்தைகளுடன் கிரிக்கெட்
விளையாடும் அதிசயமும் அடிக்கடி
நடக்கும்.

20. தான் சாமி கும்பிட்டாலும். தன்
மனைவி இயேசுவை துதிக்க
அனுமதிப்பார். அவரும் துதிப்பார். இரு
மத கடவுள்களின் படங்களும் வீட்டின்
வரவேற்பரையில் இருக்கும்.
தீபாவளிக்கும், கிறிஸ்துமசுக்கும் வீடு
கொண்டாட்டமாக இருக்கும். 

*******

True thala fans & மனசாட்சி இருக்கிறவங்க படிச்சது ஷேர்(Share)பண்ணுங்க...

No comments:

Post a Comment