Ajith - Vijay |
விஜய், சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'கத்தி' திரைப்படத்தை அதிக
தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது குறித்து விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு
ரகசிய கட்டளை விடுத்திருப்பதாக திடுக்கிடும் செய்தி ஒன்று சமூக
வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் விஜய்யின் கத்தி படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த வாய்ப்பை மிகவும் கச்சிதமாக பயன்படுத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டின் முக்கிய ஒருசில நகரங்களில் அதிக தியேட்டர்களில் ரிலீஸான திரைப்படம் என்ற சாதனையை அஜீத் நடித்த வீரம்' திரைப்படம்தான் வைத்துள்ளது. அந்த சாதனையை அனைத்து நகரங்களிலும் கத்தி மூலம் உடைக்க வேண்டும் என விஜய் தன் ரசிகர்களுக்கு கட்டளை இட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் அதிரடி கட்டளையினால் கோவையில் அவரது ரசிகர்களின் அதிரடி நடவடிக்கைகளை அடுத்து வீரம் சாதனை தகர்க்கப்பட்டது. இதுவரை கோவையில் வீரம் திரைப்படம்தான் மிக அதிகமாக 75 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஆனால் கத்தி படத்திற்கு தற்போது வரை 80 தியேட்டர்கள் புக் ஆகி உள்ளது. இன்னும் ரிலீஸுக்கு ஒருவாரம் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை அதிகமாகலாம். அதேபோல் மதுரை ,திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் வீரத்தின் சாதனையை முறியடிக்க அந்தந்த பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் தீயாய் வேலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கத்தி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் "கத்தி எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதோ அதைவிட அதிகமாக எங்கள் 'தல 55' படத்தை ரிலீஸ் செய்து காட்டுவோம் என அஜீத் ரசிகர்கள் சவால் விட்டுவருகின்றனர்".

No comments:
Post a Comment