Wednesday, October 1, 2014

பேஸ்புக்கின் புதிய அப்ளிகேஷன்!! | Facebook's New Application!!


பேஸ்புக் நிறுவனம் செவ்வாய் கிழமை அன்று தனது புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டது . இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் கிடைக்கிறது .

அந்த புதிய அப்ளிகேஷன் பெயர் ஸ்லிங்ஷாட் (slingshot) . இந்த அமைப்பின் மூலம் நம் போட்டாக்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் . ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பகிர்ந்து கொண்ட போட்டோ அந்த மொபைலில் சில நேரங்கள் மட்டுமே இருக்கும் . அதற்கு பின் அந்த போட்டோ மறைந்து விடும் .

இது ஸ்னாப்சாட் என்னும் அப்ளிகேஷனுக்கு போட்டியாக வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம் . இந்த ஸ்னாப்சாட் அப்ளிகேஷன் பேஸ்புக்கின் வாடிக்கையாளர்களை பெரிதளவில் கவர்ந்து சென்று விட்டதால் கடந்த வருடமே இந்த ஸ்னாப்சாட்டை வாங்க பார்த்தது . ஆனால் ஸ்னாப்சாட் மறுத்து விட்டதால் தானாக போட்டியில் இறங்கிவிட்டது பேஸ்புக் நிறுவனம் . அதன் விளைவாக வந்தது தான் இந்த  ஸ்லிங்ஷாட் .


ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ...

No comments:

Post a Comment