|
Aarambam |
PEARL HARBOR, DIE HARD 4, FAST FIVE,
VISHWAROOPAM ஆகிய திரைப்படங்களுக்கு ஆக்ஷன் காட்சிகளை
வடிவமைத்துக்கொடுத்தவர் ஸ்டண்ட் இயக்குனர் லீ விட்டேக்கர்.
தற்போது கமலின் விஸ்வரூபம் 2 திரைப்படத்திலும், விஷ்ணுவர்தனின் ஆரம்பம் திரைப்படத்திலும் பணிபுரிந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் இரு முக்கிய நடிகர்களின் படங்களிலும் பணியாற்றிய
அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித் சூப்பர்மேன்
மாதிரி என்று குறிப்பிட்டுள்ளார் லீ விட்டேக்கர்.
அஜித், கமல் ஆகிய இருவருமே கடினமாக உழைக்கக் கூடிய சிறந்த நடிகர்கள்.
அஜித் ஹாலிவுட்டின் டாம் க்ரூஸ் போன்று, தான் செய்ய வேண்டிய சாகசத்தை அவரே முடிவு செய்கிறார்.
தைரியமாக பல சாகசங்கள் செய்து உடலின் பல இடங்களில் காயம் அடைந்தாலும்,
மறுபடியும் ஏதாவது சாகசத்தை செய்ய ஆசைப்படும் அஜித் உண்மையிலேயே
சூப்பர்மேன் என்று கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment